கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி: 7 தொகுதிகளை பெற தேமுதிக தீவிரம்

By செய்திப்பிரிவு

தேமுதிக 7 தொகுதிகளை கேட்டு வருவதால் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஆனால், பெரும்பாலான இடங்களில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தது. தமிழகத்தில் தேமுதிகவுக்கு 5 சதவீத ஓட்டு வங்கி இருக்கிறது. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகள் இணைந்துள்ளன. அந்தக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடும் முடிந்துள்ளது.

இந்தக் கூட்டணியில் தேமுதிகவையும் சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, தமிழக பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விஜயகாந்தை அவரதுஇல்லத்துக்கே சென்று சந்தித்தார். அப்போது நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுஏற்படவில்லை. இதுபற்றி பியூஷ்கோயல் கூறும்போது, ‘‘விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிக்க மட்டுமே வந்தோம். எல்லா சந்திப்பிலும் அரசியல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என தெரிவித்தார். இருப்பினும், தேமுதிகவிடம் பாஜக மேலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தேமுதிகவினர் கருதுகின்றனர்.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு வெறும் 4 தொகுதிகள் ஒதுக்க முன்வருவதை நாங்கள் ஏற்கவில்லை. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. எனவே, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துவிட்டார். எங்களதுகோரிக்கையை ஏற்றுள்ள பாஜக, கூடுதல் தொகுதிகள் வழங்குவது குறித்து அதிமுகவுடன் ஆலோசித்து வருகிறது. எனவே, எங்களுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக எங்களது கூட்டணிபேச்சுவார்த்தை குழுவினர், அதிமுகவுடன் பேசி வருகின்றனர். திமுகவுடன் நாங்கள் எந்தவிதபேச்சுவார்த்தையும் நடத்தவில்லை’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

ஓடிடி களம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்