அதிமுகவுக்கு ஆதாயம் தரும் பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி: ஓர் அரசியல் அலசல்

By டி.ராமகிருஷ்ணன்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தல் அதிமுகவுக்கு நிச்சயமாக சாதகமாக அமையும்.

அது எப்படி என்பதை சில வாக்கு வங்கி கணக்குகளை வைத்துப் பார்போம்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, தேமுதிக, பாஜகவின் செயல்திறன் அடிப்படையில் பார்க்கும்போது வரவிருக்கும் தேர்தலில் அக்கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்குமேயானால் அது நிச்சயமாக வடக்கு, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தேமுதிக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது.

இந்தக் கட்சிகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு கணக்கை எட்ட முயற்சித்திருக்கிறோம்.

234 சட்டப்பேரவைத் தொகுதி கணக்கை அப்படியே 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொருத்திப் பார்ப்போம். சில வசதிகளுக்காக தேமுதிக, பாஜகவின் வாக்குக் கணக்கில் தமகா மற்றும் ஐஜேகேவின் வாக்குக் கணக்கு சேர்க்கப்பட்டிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது. ஐஜேக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் 14.2% வாக்குகளுக்கு வாய்ப்பு:

வடக்கு மாவட்டங்களில் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் சராசரியாக 14.2% வாக்குகளைப் பெற்றுத் தர முடியும்.

இதில் பாமகவின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும். திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் வரை, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை விழுப்புரத்திலிருந்து கடலூர் வரையிலான தொகுதிகளில் பாமகவின் பங்களிப்பு கூட்டணிக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும். மூன்று ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் பாமக செலுத்திய ஆதிக்கத்தின் அடிப்படையில் இந்த கணிப்பு முன்வைக்கப்படுகிறது.

 

பகுதி தொகுதிகள்பதிவான வாக்குகள்வாக்கு வங்கி (சதவீத அடிப்படையில்)
வடக்கு மாவட்டங்கள்14228851914.2
தர்மபுரி - கிருஷ்ணகிரி24,55,37819.2
இதர மேற்கு மாவட்டங்கள்77,55,3899.5
மத்திய மாவட்டங்கள்64,68,2477.5
தென் மாவட்டங்கள்108,45,9597.9
மொத்தம்3948,13,49211.14

 

சென்னையைப் பொறுத்தவரை மத்திய மற்றும் தென் சென்னையில் பாஜகவின் தாக்கம் மற்ற கட்சிகளைவிட அதிகமாகவே இருக்கிறது.

தேமுதிகவின் பலம் கடலூரில் இருக்கிறது. இது கூட்டணிக்கு லாபமாக அமையும். கடலூரில் பாமகவின் ஆதிக்கம் இருந்தாலும்கூட தேமுதிக அதனை விஞ்சி நிற்க வாய்ப்புள்ளது.

பாமகவின் முன்னாள் எம்.பி. அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தருமபுரி பகுதியில் பாமகவின் செயல்பாடு சிறப்பாகவே இருந்திருக்கிறது.

 

தருமபுரியில் பென்னாகரம் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. முந்தைய தேர்தலில் இங்கு பாமக 2.86 லட்ச வாக்குகளைப் பெற்றது. தருமபுரி அளவுக்கு கிருஷ்ணகிரியில் பாமக எடுபடவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

2016-ல் அரக்கோணம், காஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் ஆகிய தொகுதிகளிலும் பாமக குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைப் பெற்றது. இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சமாக 1.18 லட்சம் வாக்குகள் முதல் அதிகபட்சமாக 1.87 லட்ச வாக்குகள் வரை பெற்றிருந்தது.

இப்படியாக பாமகவின் தாக்கம் மேற்கே சேலம் வரை நீண்டுள்ளது. அங்கே பாமகவின் வாக்கு வங்கி 1.66 லட்சம். ஆனால், சேலம் தாண்டி பாமகவுக்கு மவுசு இல்லை.

பாஜகவின் கோட்டை:

பாஜகவைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்கட்சிக்கு 2.10 லட்சம் வாக்குகள் உள்ளன. அடுத்ததாக கோவை, இங்கு பாஜக குறைந்தபட்சமாக 1.16 லட்ச வாக்குகள் வரை சேகரிக்க இயலும்.

ஆனால், நாகை, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் பாஜகவுக்கு அடித்தளம் இல்லை. இங்கே ஒட்டுமொத்தமாக 40000 வாக்குகள் பெற்றால்கூட பெரிய விஷயம்தான்.

கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளிலேயே (106) தேமுதிக போட்டியிட்டிருந்தாலும்கூட குறிப்பிட்ட சில தொகுதிகளில் தங்களால் சோபிக்க முடியும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறது. கடலூர் (93,000) வாக்குகள், விழுப்புரம் (89,000) வாக்குகள், மயிலாடுதுறை (65,860) வாக்குகள், கரூர் (59,800) வாக்குகள், விருதுநகர் (48,100) வாக்குகள், தூத்துக்குடி (41,690) வாக்குகள் என்று தங்கள் பலத்தை தேமுதிக பறைசாற்றுகிறது.

இப்படி பலன்தரும் கூட்டணிக்கான அச்சாரம் இடப்பட்டுவரும் சூழலில், ஜெயலலிதா என்ற அடையாளம் இல்லாமலும் டிடிவி தினகரன் ரூபத்தில் நிற்கும் எதிர்ப்பையும் விஞ்சி தனது சொந்த பலத்தின் அடிப்படையிலேயே அதிமுக மத்திய பகுதியையும், மேற்கு மற்றும் தென் பகுதியையும் தக்க வைக்க முயற்சிக்க வேண்டிய நிலை உள்ளது.

 

வாக்கு பகிர்மான பலகை  தொகுதிகள்  எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள்
20% அதிகமான வாக்குகள்4தர்மபுரி (26.67%), விழுப்புரம் (23.94%) கன்னியாகுமரி (24.2%) கடலூர் (20.6%)
15% முதல் 20% வரை5அரக்கோணம் (18.63%) , சிதம்பரம் (18%) மயிலாடுதுறை (16.2%), சேலம் (16%), காஞ்சிபுரம் (15.87%)
10% முதல் 15% வரை10ஆரணி (14.5%), தென் சென்னை (13.78%), கோவை (12.2%), ஸ்ரீபெரும்புதூர் (11.86%), திருவண்ணாமலை (11.65%), கிருஷ்ணகிரி (11.56%), திருவள்ளூர் (11%), வேலூர் (11%), கள்ளக்குறிச்சி (11%), மத்திய சென்னை (10.76%)
5% முதல் 10% வரை16நாமக்கல் (8.7%), ராமநாதபுரம் (8.2%), தூத்துக்குடி (8.8%), விருதுநகர் (7.9%) ,திருநெல்வேலி (7.67%), மதுரை (7.65%), கரூர் (7.5%), ஈரோடு (7.3%), திருப்பூர் (7.3%), நாகப்பட்டினம் (7.2%) பொள்ளாச்சி (7.13%), தென்காசி (7%), வடசென்னை (6.25), திருச்சி (5.44%), தஞ்சாவூர் (5.4%)
5% வரை4தேனி (4.66%), பெரம்பலூர் (4.65%), திண்டுக்கல் (3.67%), சிவகங்கை (2.5%)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்