பெரிய கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இவ்விழாவை யொட்டி, தர்காவில் உள்ள 5 மினார்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னதாக தர்கா பரம்பரை கலிபா முகம்மது மஸ்தான் சாஹிப் துவா ஓதி, விழாவைத் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் இப்ரா ஹீம் கான் கட்டிய சாஹிப் மினா ரில் முதல் பாய்மரம் ஏற்றப்பட் டது. அதைத் தொடர்ந்து, செய்யது மரைக்காயர் கட்டிக் கொடுத்த தலைமாட்டு மினார், மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவரால் கட்டப்பட்ட முதுபக் மினார், பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக் கான் என்பவரால் கட்டப்பட்ட ஓட்டு மினார், தஞ்சையை ஆண்ட மன் னர் பிரதாப்சிங் கட்டிய பெரிய மினார் ஆகியவற்றில் பாய்மரம் ஏற்றப்பட்டது.

விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

9 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

57 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்