நாடாளுமன்ற தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு; அதிமுக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காகவும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில்,

1. கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்

2. வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்

3. தங்கமணி, அமைப்புச் செயலாளர், மின்சாரத் துறை அமைச்சர்

4. எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

5. பிரபாகர், அமைப்புச் செயலாளர்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அக்குழுவில்,

1. சி.பொன்னையன், அமைப்புச் செயலாளர்

2. நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்

3. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர்

4. சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சர்

5. செம்மலை, அமைப்புச் செயலாளர்

6. மனோஜ் பாண்டியன், அமைப்புச் செயலாளர்

7. ரபி பெர்னர்ட், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, அதிமுக சார்பில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில்,

1. தம்பிதுரை, கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை துணை சபாநாயகர்

2.  திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர்

3. கே.ஏ.செங்கோட்டையன், அமைப்புச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

4. பா.வளர்மதி, செய்தித் தொடர்பாளர்

5. கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளர்

6. பி.வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர்

7. வைகைச் செல்வன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்