மியூசிக் அகாடமியின் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா: ஆளுநர் தலைமையில் இன்று நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

மியூசிக் அகாடமியின் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இசைத்துறையில் சாதனை படைத்தோருக்கு மியூசிக் அகாடமி சார்பில் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி டிடிகே கலையரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக் கும் ‘சதஸ்’ விழாவில் நடை பெறுகிறது. விழாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார்.

பிரபல கர்னாடக வாய்ப்பாட் டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதும், மிருதங்க வித்வான் தஞ்சாவூர் ஆர்.ராமதாஸ், திருவனந்தபுரம் வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் கே.ஓமணா குட்டி ஆகியோருக்கு ‘சங்கீத கலாச்சார்யா’ விருதும், வீணை கலைஞர் கல்யாணி கணேசன், நாதஸ்வர வித்வான் செம்பனார் கோவில் எஸ்ஆர்ஜி. ராஜண்ணா ஆகியோருக்கு ‘டிடிகே’ விருதும், ஹரிகதா விற்பன்னர் பிரமீளா குருமூர்த்திக்கு ‘மியூசிக்காலஜிஸ்ட்’ விருதும் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கி கவுரவிக்கிறார். இவ்விழாவில், மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும், மியூசிக் அகாடமியின் 13-வது நடனவிழாவின் தொடக்க நிகழ்ச்சி 3-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் ஜி.பர்ஜெஸ் தலைமை விருந்தினராக பங்கேற்க உள் ளார். அன்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் சாந்தா தனஞ்ஜயனுக்கு ‘நிருத்ய கலாநிதி’ விருது வழங் கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்