காலி பணியிடங்களை நிரப்ப கோரி ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

By செய்திப்பிரிவு

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 6 ரயில்வே கோட்டங்களின் ரயில் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

பணிச்சுமை

இப்போராட்டம் குறித்து, சங்கத்தின் தென்மண்டல தலைவர் வி.பாலச்சந்திரன் கூறியதாவது:

ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை காலியாக உள்ளன. இதனால், ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மனஉளைச்சல்

சில நேரங்களில் கருவிகளின் குறைபாடு, ஒருசில மருந்துகள் அல்லது ஒருசில உணவுப் பொருட்களினாலும் சுவாசப் பரிசோதனைக் கருவிகள் ரத்தத்தில் சிறு அளவு ஆல்கஹால் உள்ளதாகக் காண் பிக்கும். இதனால், மற்றவர்கள் முன்னிலையில் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளதாக கருதப்படும் வாய்ப்பு உள்ளது.

இதனால், அவர்கள் மனஉளைச் சலுக்கு ஆளாகின்றனர். எனவே, ரத்தப் பரிசோதனைக்கு அனுப்பு வதற்கு முன்பாக இரண்டாவது கருவி யின் மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்