முதல்வர் பழனிசாமியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமியை பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றிரவு திடீரென சந்தித்தார்.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், தேர்தலை நிறுத்தி வைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கருத்து கேட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தன் முடிவை எந்தநேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, தேர்தல் கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழகம் வந்தார்.

இந்தச் சூழலில், நேற்று இரவு முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்று கூறினார்.

இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல் வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

10 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்