வங்கி, பொது இன்சூரன்ஸ் பணி: தேர்வு எழுத இலவச பயிற்சி வகுப்புகள்

By செய்திப்பிரிவு

வங்கி, பொது இன்சூரன்ஸ் மற்றும் எஸ்எஸ்சி தேர்வுகளுக்காக டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்குகிறது.

பொதுத்துறை வங்கிகள், பொது இன்சூரன்ஸ் மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இவற்றை தேர்வு நடத்தி நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகளில் பங்கேற்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மையம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறது.

சென்னையில் சிஐடியு அலுவலகம், கச்சாலீஸ்வரர் கோயில் தெரு, பாரிமுனை என்ற முகவரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்குகின்றன. இதில் பிளஸ் 2 படித்தவர்களும் விண்ணப் பிக்கலாம்.

தொடக்க நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி பொதுமேலாளர் எம்.நாகராஜன், ஓஎன்ஜிசி துணை பொதுமேலாளர் சி.சிவநேசன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பொதுமேலாளர் பி.ஹேமமாலினி, தமுமுக மாநில செயலாளர் ஹாஜாகனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இலவச பயிற்சி வகுப்பில் சேர 9444641712, 9444982364 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்