மதுரை ஆவின் தலைவரான 5 மணி நேரத்தில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா அதிமுகவிலிருந்து திடீர் நீக்கம்; கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்ததின் பின்னணி

By செய்திப்பிரிவு

மதுரை ஆவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மணி நேரத் தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பலரும் வாழ்த்துத் தெரிவித்த நிலையில் திடீரென நீக்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர். மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள 1,070 கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஆவின் ஒன்றியம் மதுரையில் உள் ளது. இந்த ஆவின் நிர்வாகத்துக்கான தேர்தல் படிப்படியாக நடந்தது.

ஆவின் தலைவராக இருந்த தங்கம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். மீதி 15 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிச.15-ல் நடந்தது. இதில் துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 15 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

மதுரை ஆவினில் நேற்று காலை 10 மணிக்கு நடந்த தேர்தலில் தலை வர் பதவிக்கு ஓ,ராஜா, துணைத் தலைவர் பதவிக்கு தங்கம் ஆகி யோர் மட்டுமே மனுத்தாக்கல் செய்த னர். இதையடுத்து 2 பேரும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி காலை 11 மணிக்கு அறிவித்தார். இதையடுத்து, அமைச்சர் செல் லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் மாவட் டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிற்பகல் 12 மணியள வில் ஆவினுக்கு வந்து ஓ.ராஜா வுக்கு சால்வை அணிவித்து வாழ்த் துத் தெரிவித்தனர். இனிப்புகள் வழங்கி வெற்றியை கட்சியினர் கொண்டாடினர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக முதல்வர், துணை முதல்வரும் அறிவித்தனர். அதில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெய ரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந் தும் நீக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கட்சியினர் கூறியது: மதுரை ஆவின் தலைவராக தனது ஆதரவாளர் தங்கத்தையே தேர்ந்தெடுக்க செல்லூர் கே.ராஜூ திட்டமிட்டார். ஆனால், ஓ.ராஜா முயற்சித்ததும் மேலிடத்து சமாச் சாரம் எனக் கருதி செல்லூர் ராஜூ ஒதுங்கினார். ஓ.ராஜா தலைவர் பதவிக்கு முயற்சிப்பதை எதிர்த்து தேனியைச் சேர்ந்த அமாவாசை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்ல முத்து என்பவரை ஆவின் தலைவ ராக்க விரும்பியதாக தகவல் வெளி யானது. ஆனாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தகவல் அளிக்கப்படவில்லை.

ஓ.ராஜா மதுரை ஆவின் தலைவரானால், அவர் மாநில அள வில் ஆவின் கூட்டுறவு இணையத் துக்கும் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளது. அப்போது, தனது நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட லாம் எனக் கருதிய பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

எனினும் துணை முதல்வரிடம் இருந்து எந்த தகவலும் வராததால், மவுனத்தை சம்மதமாகக் கருதி அனைவரும் ஓ.ராஜாவுக்கு ஆதரவாகவே பணியாற்றியதால் அவர் இயக்குநராக தேர்வானார். அவர், மற்ற இயக்குநர்கள் பலரை மதுரையில் ஓட்டலில் 2 நாட்க ளாக தங்கவைத்து, யாரும் எதிர்த் துப் போட்டியிடாதவாறு பார்த்துக் கொண்டார்.

தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமார், ஆதரவாளர் ஆர்டி.கணேசன் உட்பட யாரும் ஆவின் தலைவர் தேர்தலின்போது வர வில்லை. மதுரையில் இருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் வரவில்லை. இந்நிலையில்தான் பதவியேற்ற 5 மணி நேரத்துக்குள் ஓ.ராஜா கட்சியில் இருந்தே நீக்கப் பட்டதாக அறிவிப்பு வருகிறது.

ஓ.ராஜாவை போட்டியிட வேண் டாம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் போட்டியிட்டால் குடும்பத் தினரின் ஆதிக்கம் அதிகமாக உள் ளதாக கட்சியினர் கருதுவர் என்றும், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு விசாரணை முடியாதது, உயர் நீதிமன்றத்தில் ஆவின் தலைவ ராவதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது என பல காரணங்களை மனதில் வைத்தே ஓ.ராஜாவை தலைவராக்க ஓபிஎஸ் விரும்பவில்லை. இதை சகோதர ரிடம் சொன்னால் கேட்கமாட்டார் எனக் கருதிய ஓபிஎஸ், அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஓ.ராஜா கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டது அதிமுக வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக் குமார் சென்னையில் கூறியது:

அதிமுக கட்டுக்கோப்பான இயக் கம். கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் நீக்கப்படுவார் கள். இதில் அண்ணன், தம்பி உறவு இல்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை இருக்கும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உணர்த்தி யுள்ளனர். கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

விளையாட்டு

4 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

தமிழகம்

40 mins ago

இணைப்பிதழ்கள்

57 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்