வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய நிர்மலாதேவி மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பேராசிரியை நிர்மலாதேவி உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக் களை நீதிமன்றம் நேற்று தள்ளு படி செய்தது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவி களை பாலியல்ரீதியில் தவறாக வழிநடத்திய புகாரில் ஏப்.16-ல் கைது செய்யப்பட்டார். இவருக்குத் தூண்டுதலாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாண வர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்த னர்.

இவ்வழக்கு விசாரணை திரு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெறுகி றது. தங்கள் மீதான குற்றச்சாட்டு களுக்கு முகாந்தரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என 3 பேரும் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தனர். இதற்கு சிபிசிஐடி போலீஸார் எதிர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி உட்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, இந்த வழக்கில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி 3 பேரும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி லியாகத் அலி தள்ளுபடி செய்தார்.

மேலும், விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

மீண்டும் மனு தாக்கல்

பின்னர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத் துச் செல்லப்பட்டனர். அப்போது உதவிப் பேராசிரியர் முருகன் கூறும்போது, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்