8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது ஏன்?- விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட் டத்தில் நிலங்களை கையகப்படுத்த புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப் பாணை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள், நில உரிமையாளர்கள், தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது எனவும், நில உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று நீதிபதி டி.எஸ்.சிவஞானம் சென்னையில் இருந்தும், நீதிபதி பவானி சுப்பராயன் மதுரை கிளையில் இருந்தும் காணொலி காட்சி மூலமாக விசாரித்தனர். அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறி, தற்போது 8 வழிச்சாலைக்காக காஞ்சிபுரத்தில் 60 கிமீ தூரத்துக்கு 1,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை ஆணையம் புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

எந்த சம்பந்தமும் இல்லை

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திக்கேயன், ‘ எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற் கெனவே பிறப்பிக்கப்பட்ட அறிவிப் பாணைக்கும், தற்போது புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறி விப்பாணைக்கும் எந்த சம்பந்த மும் இல்லை.

ஆனால் இந்த புதிய அறிவிப்பாணை 8 வழிச்சாலை திட்டத்தின் நீட்சிக்காகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மீறப்பட வில்லை’ என வாதிட்டார்.

பழைய அறிவிப்பாணையில் மாற்றங்கள் செய்து தற்போது புதிதாக அறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அதை மத்திய அரசின் வழக்கறிஞர் கார்த்திக்கேயன் திட்ட வட்டமாக மறுத்தார்.

அதையடுத்து நீதிபதிகள், தற்போது பிறப்பிக் கப்பட்டுள்ள அறிவிப்பாணை குறித்து விளக்கம் அளிப்பதுடன், அதன் தாக்கம் குறித்தும் வரும் 13-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை டிச.14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதேபோல 8 வழிச்சாலை திட்டத் துக்காக ஏற்கெனவே நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அதுதொடர்பான அறிக்கையை வரும் ஜன.25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்