பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உறுதி:  கனிமொழி எம்.பி. கருத்து

By செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அள வில் வலுவான மெகா கூட்டணி அமைவது உறுதி என மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற் பதற்காக கனிமொழி நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான மெகா கூட்டணி அமைவது உறுதி. டெல்லியில் நாளை (டிச. 10) நடக்கும் பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார்.

வரும் 11-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கஜா புயலால் பாதிக் கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்காதது குறித்து கேள்வி எழுப்புவேன். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியாற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் பேசுவேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடு தலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத் தது. ஆனாலும், அவர்களை விடுவிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல. 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்