இரு கட்சிகளை இணைக்க பாஜக முயற்சி; அதிமுகவுடன் இணைய தயார்- தங்க தமிழ்ச்செல்வன் நிபந்தனை

By செய்திப்பிரிவு

அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார். முதல்வரையும் சில அமைச்சர் களையும் நீக்கினால் அதிமுகவில் இணைய நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எனவே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண் டால் வெற்றி பெற முடியாது என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அமமுக வளர்ச்சி பெற்று வருவ தால் அதிமுகவையும், அமமுக வையும் இணைய வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.

இணையத் தயார்

அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் பாதுகாக்கப் பட்ட அதிமுகவும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். திமுகதான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில ஊழல் அமைச்சர்களையும் மாற்றினால் அதிமுகவுடன் இணைய நாங்கள் தயாராக உள்ளோம்.

அதிமுக, திமுக, பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மதச்சார்பற்ற கட்சிகளுடன்தான் கூட்டணி என்று தினகரன் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம். அதிமுகவை பிளவுபடுத்தி, இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்ததை தொண்டர்கள் விரும்ப வில்லை.

அதிமுக தொண்டர்களில் 90 சதவீதம் பேர் எங்களுடன் உள்ள னர். 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும். தோல்வி பயத்தால் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலை விரும்ப வில்லை.

தமிழகத்துக்கு அநீதி

கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக முதல்வர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது தவறு. அவர் 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்க வேண்டும். மத்திய அரசு ரூ.350 கோடி மட்டும் நிவாரணம் அறிவித்து தமிழகத்தை வஞ்சித்துள்ளது.

தமிழக அமைச்சர்களோ, முதல்வரோ மக்கள் பிரச்சினைக் காக டெல்லிக்கு செல்வதில்லை. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே செல்கின்றனர்.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுவித்ததுபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்