மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்: கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி யில் நிலவி வந்த ‘பெய்ட்டி’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து வரு கிறது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

புயலின் நகர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 410 கிமீ தொலை வில் ‘பெய்ட்டி’ புயல் மையம் கொண்டுள்ளது. இது 19 கிமீ வேகத் தில் நகர்ந்து வருகிறது. இது தற் போது தீவிரப் புயலாக வலுப்பெற் றுள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வட தமிழகத் தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அப்பகுதியில் மீனவர்கள் 17-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவு றுத்தப்படுகிறார்கள். மேலும் காரைக்கால் முதல் சென்னை வரை யிலான அனைத்து துறைமுகங் களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

வங்கக் கடலில் உருவான இந்த புயல் காரணமாக வட தமிழக கட லோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதலே தரைக்காற்று வீசி வரு கிறது. அதனால் கடல் மணல் அடித்துச் செல்லப்பட்டு அப் பகுதியே புழுதிக்காடாக காட்சி யளித்தது.

அவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட மணல், மெரினா வளைவு சாலையில் குவியல், குவி யலாகச் சேர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. பட்டினப் பாக்கம் நொச்சிக்குப்பம் மீனவப் பகுதியில் கடற்கரையில் வைக்கப் பட்டிருந்த மீன்பிடி வலைகள் அனைத்தும் கடல் மணலால் மூடப்பட்டிருந்தன. சாலையில் நடந்து சென்ற பலரின் கண்களை மணல் தூசி பதம்பார்த்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. குளிர்ந்த தரைக்காற்றும் வீசியது. மெரினா கடற்கரையில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

நேற்று வட தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரித் தன. இதனால் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மீனவ குடியிருப்புகள் வரை கடல் அலைகள் தொட்டுச் சென்றன. நொச்சிக்குப்பம் பகுதி யில் படகுகளை நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சுமார் 50 அடி தூரத்தில் உள்ள மணல் மேட்டுப் பகுதிகள் வரை அலைகள் வந்தன.

அப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பத்மா கூறும்போது, "இந்த அலைகளின் ஆக்ரோஷம், சுனாமியை நினைவுபடுத்துகிறது. இவ்வளவு ஆர்ப்பரிக்கும் என்று அரசு உட்பட யாரும் எந்த எச்சரிக் கையும் விடவில்லை. இந்த அலைகள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்

பெயரில் குழப்பம்

இந்த புயலின் பெயர் ‘பெய்ட்டி’ என்றும் ‘பெதாய்’ என்றும் இரு வேறு வார்த்தைகளில் அழைக்கப் படுவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டு மொழியில் பெய்ட்டி (PAYTI) என பெயரிடப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் எழுதும்போது பெதாய் (PHETHAI) என எழுதப்படுகிறது. அதை பெய்ட்டி என்று உச்சரிப்பது தான் சரி” என்று விளக்கமளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்