பொதுத்தேர்வு நேரம் மாற்றம்: தேர்வுத் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

10, 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு நேரங்கள் மாற்றி அமைக் கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு அட்டவணை கடந்த ஜூனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சில மாற்றங்களுடன் பொதுத் தேர்வு கால அட்டவணையை நாள் மற்றும் நேரம் வாரியாக தேர்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மார்ச்சில் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் (முதல், 2-ம் தாள்) மற்றும் ஆங்கிலம் (முதல், 2-ம் தாள்) தேர்வுகள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். மற்ற கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். இதேபோல், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்து, மார்ச்சில் மறுதேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங் களுக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகவும், நேரம் 2.30 மணியாகவும் இருக்கும். மற்ற எல்லா பாடங் களுக்கும் மதிப்பெண் 200 ஆகவும், நேரம் 3 மணியாக இருக் கும். மேலும், நேரடியாக பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம் வகுப்பு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்த கூடுதல் விவரங் களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்’’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்