இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி பதவி பறிபோன விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

இலங்கையில் விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக பேசி பதவி பறிபோன விஜயகலா மகேஸ்வர னுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் சுழிப் புரத்தைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி கடந்த ஜுன் 25-ம் தேதி பாழடைந்த தோட்டக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டது பிரேத பரி சோதனையில் தெரியவந்தது. சிறுமியின் படுகொலையை கண்டித்து இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடத்தினர்.

அந்த நிலையில் யாழ்ப்பாணம் வீர சிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவரும், இலங்கை யின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார துணையமைச்சராக இருந்தவரு மான விஜயகலா மகேஷ்வரன் பேசினார். அப்போது, "அண்மையில் யாழ்ப்பாண சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத் துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார். எங்களுடைய மக்களை அதிபர் காப்பாற்றவில்லை. ஆனால் அவர் கட்சியை வளர்கின்றார். நாங்கள் 2009-ம் ஆண்டு போருக்கு முன்னாள் விடுதலை புலிகள் காலத்தில் எப்படி பாதுகாப்பாக வாழ்ந்தோம் என்பதை இப்போதுதான் உணர்கின்றோம். நாங்கள் நிம்மதியாக வாழவும், எங்களுடைய பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்றால் மீண்டும் விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதனால் கொழும்பில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சர் பதவி யில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கோரிக்கையை ஏற்று விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர் பதவியை கடந்த ஜூலை 5-ம் தேதி ராஜினாமா செய்தார்.

மேலும் சபாநாயகர் கருஜயசூரிய, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த விஜயகலா மகேஷ்வரன் மீது இலங்கையின் சட்டத்துறைக்கு விசார ணைக்கு உத்தரவிட்டார். விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், “தேசிய பாது காப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார். இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய முகாந் திரம் உள்ளது” எனத் தெரிவித்தது. தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் கூறினார்கள்.

கடந்த அக்.8-ம் தேதி கொழும்பில் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க சென்ற நிலையில் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை யில் 2-ம் கட்ட அமைச்சர்கள் நியமனத்தின் போது அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 3 பேரும், இணை அமைச்சர்கள் 17 பேரும், துணை அமைச்சர்கள் 7 பேரும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னி லையில் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் விஜயகலா மகேஸ்வரன் இணை கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண் டார். இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

30 mins ago

ஓடிடி களம்

23 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்