தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு: அன்புமணி ராமதாஸ் தகவல்

By செய்திப்பிரிவு

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இணைந்து, நாடாளு மன்றம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டு, மக்க ளுக்கு ஆறுதல் கூறாதது தமிழகத் துக்கு செய்யும் பெரிய துரோகம். கம்ப்யூட்டர்களை கண்காணிக்க 10 துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது தவறானப் போக்கு.

பட்டாசு தொழிலாளர்கள் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் வாதாட, தமிழக அரசு வழக்கறிஞர் நீதி மன்றத்துக்கு செல்லவில்லை. இதில் ஏதோ சதி நடக்கிறது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, இதுவரை யாரிடமும் பாமக பேச்சுவார்த்தை நடத்த வில்லை. தேர்தல் அறிவித்த பின்னரே, எங்களது நிலைப் பாட்டை தெரிவிப்போம் என்றார்.

இறகுபந்து போட்டி

முன்னதாக, ஈரோடு கள்ளுக் கடைமேட்டில் உள்ள நீல்கிரிஸ் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி நடைபெற்றது.

இதில் 35 வயது முதல் 70 வயது வரையிலானோர் பிரிவில் அன்புமணி தலைமையில் பங்கேற்ற இரட்டையர் ்பிரிவு அணி காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்