ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்க ஐஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் அமைத்தது.

கடந்த ஆகஸ்டு 1 அன்று சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

அந்த மனுவில் இந்த அரசாணை என்பது உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், முக்கிய நபர்களையும் பாதுகாக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அரசாணையை ரத்து செய்யவேண்டும், செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஆர்.மகாதேவன் அமர்வு, சிலைக்கடத்தல் தொடர்பான சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த ஆகஸ்டு 7-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கின் அனைத்து இறுதி வாதங்கள் கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அதில், சிலைகள் கடத்தப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வழக்குகளை விசாரிக்க அங்குள்ள தூதரகங்களை அணுக சிபிஐ விசாரணை சரியாக இருக்கும் என்பதாலேயே வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பின் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஆர்.மகாதேவன் அமர்வு, ''சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசுத் தரப்பு பிறப்பித்த உத்தரவு  முற்றிலும் தவறானது. உள்நோக்கம் இல்லை என அரசுத் தரப்பு தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த அரசாணை சட்டவிதிகளுக்கு புறம்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ளதால் அரசாணை செல்லாது'' என்று தீர்ப்பளித்தது.

மேலும்,  சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து இன்று ஓய்வுபெறவிருந்த ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து அவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகச் செயல்படுவார் என உத்தரவிட்டது. இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது.

தமிழக அரசும், மத்திய அரசும், சிபிஐயும் அவரது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

56 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

18 mins ago

மேலும்