‘கஜா’ புயல் சேதங்களை மதிப்பிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

‘‘கஜா’’ புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதமின்றி உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: ‘கஜா’ புயலின் கொடூரத் தாக்கு தலால், வேதாரண்யம், மன்னார் குடி, பட்டுக்கோட்டை மற்றும் அதையொட்டிய பகுதிகள் பாதிக் கப்பட்டுள்ளன. புயலால் பாதிக் கப்பட்ட வேதாரண்யம், மன்னார் குடி மற்றும் பட்டுக் கோட்டை பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, அப் பகுதி மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண் டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்காக நிலங்களைக் கை யகப்படுத்தும்போது சாதாரண தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயி ரம் வீதமும், முதிர்ந்த தென்னை மரங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் இழப்பீடாக வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித் திருந்தது. இப்போதும் அதே அளவு கோலின்படி சாய்ந்த தென்னை மரங்களுக்கும், பிற மரங்களுக்கும் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழக அரசின் பாராட் டத்தக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும் ‘கஜா’ புயலால் 51 பேர் உயிர்ப் பலியானது வேதனை அளிக்கின் றது. நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளும், கல் வீடுக ளும் சிதைந்து போயின. நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜய காந்த்: தமிழக அரசும், அமைச் சர்களும் ‘கஜா’ புயல் பாதிப்பி லிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக் குரியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் பாதிக் கப்பட்ட அனைத்து மாவட்டங்க ளிலும் அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், தென்னை, வாழை, விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டது, 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார் கள் என்ற செய்தி வேதனைக் குரியது. மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு வழங்கிட வேண்டும். தமிழக அரசு ‘கஜா’ புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக் களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

திக தலைவர் கி.வீரமணி: ‘கஜா’ புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து பல மாவட்டங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.போக்குவரத்து சீர்பட இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படுமோ தெரியவில்லை. மாநில அரசு நிவாரணப் பணிகளையும், தொலை நோக்கு ஏற்பாடுகளையும் சிறப் பாகவே செய்திருப்பது பாராட்டுக் குரியதே. இதை பேரிடர் நிகழ் வாக அறிவித்து மத்திய அரசு பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும். தன்னார்வ அமைப்புகளும், தனி யார் நிறுவனங்களும் தாராள மனப்பான்மையுடன் உதவிக்கரம் நீட்டவேண்டும்.

சமக தலைவர் சரத் குமார்: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் விரைந்து வழங்க வேண்டும். சமக நிர்வாகிகள், தொண்டர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் நிவாரணம் வழங்கும் பணியிலும் அரசுடன் இணைந்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்க ளுக்குக் குடும்பத்துக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிவாரணத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்: ‘கஜா’ புயல் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தமிழக அரசு எடுத்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை காரண மாக உயிர்சேதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளது. வேளாண்மைப் பயிர் கள் பாதிப்பு குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்திட உத்தரவிட வேண்டும். தென்னை மரம், ஒன் றுக்கு ரூ.20 ஆயிரமும், நெல் ஏக்க ருக்கு ரூ.25 ஆயிரமும், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சமும் மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ப உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்