பாலியல் தொழில் நடத்தி நூதனமாக பணம் பறித்த கோயம்பேடு காவல் நிலைய ஏட்டு சஸ்பெண்ட்: சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியதுடன் பணம் பறித்து வந்த புகாரின்பேரில் கோயம்பேடு குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை என்.எஸ்.கே.நகரில் இருந்து கடந்த 25-ம் தேதி நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட பெண் ஒருவர், தனது வீட்டுக்குள் மர்ம நபர் திருட முயன்றதாகவும் அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை பிடித்து அமைந்தகரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் "தன்னை அந்தப் பெண்தான் பணத்துக்காக பாலியலுக்கு அழைத்தார்" என்றும் அப்போது, காவலர் உடையில் வந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற தாக குறிப்பிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பெண்ணின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரியும் பார்த்திபனுடம் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. விசாரணையில், அந்தப் பெண்ணு டன் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் பார்த்திபன் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட பெண் மீது பாலியல் வழக்கு உட்பட 6 பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த ஏட்டு பார்த்திபன் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாகி விட்ட தாக கூறப்படுகிறது. இதற்கிடை யில் அவரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள் ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "தலைமை காவலர் பார்த்திபன் என்.எஸ்.கே. நகரில் வாடகைக்கு வீடு எடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை தங்க வைத்துள்ளார். வாடிக்கையாளர்களை தமது வீட்டுக்கு அழைத்து வரும் பெண், அதுகுறித்து ஏட்டு பார்த்திபனுக்கும் தகவல் கொடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு திடீரென ரெய்டுக்கு செல்வதுபோல செல்லும் பார்த்திபன், கைது செய்யாமல் இருக்க பணம் தருமாறு கேட்டு பணம் பறித்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

சம்பவத்தன்று வாடிக்கையாளருக்கும் பெண்ணுக்கும் பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண், வாடிக்கையாளரை திருடன் எனக் கூறி புகார் தெரிவித்திருக்கிறார்

வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு பேருந்து மூலம் சென்னை வரும் இளம்பெண்களை குறி வைத்து அன்பாக பேசுவதுபோல் நைசாக பேசி சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அனுப்பி வைத்து அவர்களை மிரட்டி, கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி ஏட்டு பார்த்திபன் பணம் சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

46 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்