18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்?- தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

By செய்திப்பிரிவு

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தது.

தீர்ப்பில் தனி நீதிபதி தொகுதியை காலி என அறிவிக்கவும், இடைத்தேர்தல் நடத்தவும் விதித்த தடையும் நீக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணைய நடைமுறைகள் துவங்கி உள்ளன. 18 தொகுதிகளை காலி என அறிவித்து பின்னர் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் துவங்கும்.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நேற்று 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வந்துதுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன் அனுப்பபடும்.

இதுவரை வந்த தகவல்கள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். தொகுதி காலியானதில் இருந்து ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தவேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவில் இருந்து தடை நீங்கிய ஆறுமாதத்தில் நடத்தப்படும்.

தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி சட்டப்படி தேர்தல் நடத்தப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்