பெண் பெயரில் பாலியல் அழைப்பு: ‘பிக் பாஸ்’ வைஷ்ணவி ட்விட்டரில் ஆத்திரம்

By செய்திப்பிரிவு

முகநூலில் பெண் பெயரில் பழகி பின்னர் பாலியல் உறவுக்கு அழைத்தவர்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 'பிக் பாஸ்' வைஷ்ணவி கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

'பிக் பாஸ்-2' சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் இவர் நேற்று தனது ட்விட்டரில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். தற்போது அது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

வைஷ்ணவியின் முகநூலில் நட்பு வட்டத்தில் இணைந்த பெண் ஒருவர் அவரது தனிப்பெட்டியில் அவரிடம் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அக்கா என்று அழைக்கும் அவர் தான் தாம்பரத்தில் வசிப்பதாகக் கூறுகிறார்.

பின்னர் திடீரென நாம் ஏன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி இதைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்பாலின உறவு தவறில்லை என பிரிவு 377 நீக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது இதுபோன்ற அழைப்புகள் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்குக் கீழே அவருக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் இது போலி ஐடி. பெண் பெயரில் உலாவும் நபர்கள் உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல் ட்விட்டரிலேயே வைஷ்ணவி இந்த விவகாரத்தை முடித்துக்கொள்வார் என்று தெரிகிறது.

இதுபோன்ற விவகாரங்களுக்கு சைபர் பிரிவு உள்ளது. அதில் புகார் அளித்தால் இதுபோன்ற போலி நபர்கள் மீது நடவடிக்கை பாயும். ஆனால் அவ்வாறு செய்யாமல் ட்விட்டரில் மட்டும் பதிவிடுவதால் இதுபோன்ற போலி ஐடியில் உலாவும் நபர்கள் மேலும் ஊக்கமடையவே வாய்ப்புண்டு என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்