மகா புஷ்கரம்: பக்தர்கள் புனித நீராடும் தாமிரபரணி

By செய்திப்பிரிவு

வற்றாத ஜீவநதியான நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து 64 தீர்த்தக்கட்டங்கள், 143 படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாமிரபரணி மகா புஷ்கர விழாவில், 143 படித்துறைகளில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய இடங்களில் அதிகஅளவு மக்கள் கூடி நீராடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், முக்கூடல், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கரிசூழ்ந்த மங்கலம், திருவேங்கடநாதபுரம், குறுக்குதுறை, சீவலப்பேரி அருகன்குளம் ஆகிய தீர்த்த கட்டங்களில் மக்கள் நீராடி வருகின்னறர். இதுபோலவே, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, புன்னக்காயல் ஆகிய படித்துறைகளிலும் மக்கள் நீராடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்