31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த 3 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: தி.மலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 

By செய்திப்பிரிவு

செய்யாறு அருகே கல்குவாரியில் 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த 3 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுஅடுத்த சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ கோபால். இவரது கல்குவாரியில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்படுகை கண்ணிகை கிராமத்தில் வசிக்கும் 3 குடும்பங் களைச் சேர்ந்த 31 பேர் கொத்தடிமை களாக பணியாற்றி வந்தனர். அவர் களுக்கு, தினக் கூலியாக ரூ.17 முதல் ரூ.25 வரை வழங்கப்பட்டுள் ளது.

வட்டிக்கு கடன் வாங்கினர்

இதுகுறித்து தகவலறிந்த அப் போதைய செய்யாறு கோட்டாட்சி யர் பிரியா தலைமையிலான வருவாய்த் துறையினர் கடந்த 2012-ம் ஆண்டு சம்பவ இடத்துக் குச் சென்று 31 பேரை மீட்டனர். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் வேதாசலம் பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரி டம் வட்டிக்கு பணம் வாங்கியதாக வும், பணத்தை திருப்பி தராததால் அவரது நண்பரான ராஜகோபால் கல்குவாரியில் கொத்தடிமையாக பணிபுரிந்தது தெரியவந்தது. இது குறித்து செய்யாறு காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சிறை மற்றும் அபராதம்

இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன் றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 31 பேர் கொத்தடிமைகளாக வைக்கப்பட் டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கல்குவாரி உரிமை யாளர் ராஜகோபால், அவரது மகன் சுதாகர், வட்டிக்கு பணம் கொடுத்த சந்திரசேகரன் ஆகியோருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்