மத்திய அரசு நிர்ணயித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறையும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல் 

By செய்திப்பிரிவு

மத்திய அரசே நிர்ணயித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுகவின் 47- வது ஆண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்ற தினகரன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவர் அங்கு ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஆர்.கே. நகரை மீட்டெடுக்கட்டும். தினகரன் நினைப்பது நடக்காது. எம்ஜிஆர் ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை நாங்கள் வழி நடத்திக் கொண்டே இருப்போம். 2021-ம் ஆண்டுக்கு பிறகும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்.

ஊழலின் மொத்த உருவம் ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான். இதை யெல்லாம் மறந்துவிட்டு அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் பேசக்கூடாது.

பிரதமரை சந்தித்தபோது பெட் ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து முதல்வர் வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலை நிர்ணயம் செய்வதை தற் காலிகமாக நிறுத்திவைத்து, மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்தால்தான் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

47 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்