புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதமாக நடைபெற்ற மொய் விருந்து முடிவுக்கு வந்தது: நடத்தியது 2,000 பேர்; வசூல் ரூ.500 கோடி

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த மொய் விருந்து விழாக்கள் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தன. மொத்தம் 2 ஆயிரம் பேர் விருந்து நடத்திய நிலையில் ரூ.500 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்க லம், கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொய் வரவு - செலவு வைத்துள் ளனர். ஆடி மாதத்தில் தினமும் 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந் தும் தனியாகவும் மொய் விருந்து விழாவை நடத்தி வந்தனர். இவ் விழாக்களுக்கு வருவோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

இந்த ஆண்டில் அதிகபட்சமாக வடகாட்டில் அதிமுகவைச் சேர்ந்த இருவருக்கு தலா ரூ.4 கோடி மொய் வசூலானதாக கூறப்படு கிறது.

வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட அதிக அளவு மொய் விருந்து விழாக்கள் நடத்தப்படும். இப்பகுதியில் நேற்று முன்தினத்துடன் மொய் விருந்து விழாக்கள் முடிவுக்கு வந்தன. கடந்த ஒரு மாதமாக சுமார் 2 ஆயிரம் பேர் மொய் விருந்து விழாக்கள் நடத்திய நிலையில் அவர்களுக்கு மொத்தம் ரூ.500 கோடி வசூலாகி இருக்குமென கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது:

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயம் பாதிக்கப்பட்டு வருவ தால் அது சார்ந்த தொழில்களும் நலிவடைந்துவிட்டன. இதனால், முன்பிருந்த அளவுக்கு மொய் வசூலாவதில்லை. அதுவும் குறைந்துவிட்டது. தற்பெருமைக் காக கடன் வாங்கி மொய் செய்தவர்களாலும் மொய் விருந்து விழா ஆட்டம் கண்டுள்ளது.

இதையறிந்த பலர் மொய் வரவு - செலவை ரத்து செய்து வருகின்றனர். சிலர் வாங் கிய மொய்யை திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பகுதியில் மொய் விருந்து விழா நடத்திய சுமார் 2 ஆயிரம் பேருக்கு மொத்தம் ரூ.500 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட குறைவுதான் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்