கருணாநிதியின் மறைவால் அரசியலில் வெற்றிடம்: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

கருணாநிதியின் மறைவால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட் டுள்ளதாக அவருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மறைந்தார். அவரது உடல், ராஜாஜி அரங்கில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு கட்சி களின் தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி: என்னுடன் கலை ஞர் நல்ல நட்பு கொண்டிருந்தார். கலைஞரின் இழப்பு தேசத்துக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பு.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பல லட்சம் மக்களின் இதயங் களை வென்றுவிட்டு சென்றிருக் கிறார். இனிமேல் தமிழக வரலாறு இப்படிப்பட்ட ஒரு தலைவரை பார்க்குமா என்பது கேள்விக்குறி தான். ஒரு வரலாறு முடிந்து விட்டது. அரசியலில் சவாலான சூழ்நிலைகளில் கலைஞரின் பங்கு எப்போதும் இருக்கும். பாரதிய ஜனதா சார்பில் ஒரு வார காலத்துக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, திமுக தொண்டர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: தமிழ் மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் வீற்றிருக்கும் தமிழன்னையி்ன் புதல்வர் கருணாநிதி. கருணாநிதி மறைவால் இந்தியா மற்றும் தமிழக அரசியலில் மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: என்னுடைய இனிய நண்பர் மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. துயரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. ஒரு பல்கலைக்கழகம் மறைந்தது. பன்முகத்தன்மை கொண்ட அவர் எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. கலையானாலும் இலக்கியமானாலும் திரைத் துறையானாலும் அரசியலானாலும் எதையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு, தமிழுக்கு அயராது பாடுபட்ட பெருந்தலைவர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: எனக்கு முகவரி வழங்கியவர். தாயினும் மேலாக பாசம் காட்டியவர். உன்னை நான் இழந்தேனா, என்னை நீ இழந்தாயா என்று கண்ணீர் மல்க திண்டுக்கல்லில் அவர் பேசியதை என் மூச்சு இருக்கும் வரை மறக்க முடியாது. மரணத்தையும் ஒரு விளையாட்டாக போராடி பெற்றாய். பேரறிஞர் அண்ணாவின் இதயம் கலைஞரின் இதயத்தில் இருக்கிறது. அதை நான் வரும்போது உன் காலடியில் வைப்பேன் என்றார் கலைஞர். அண்ணா இளைப்பாறும் இடத் திலேயே கலைஞரும் இளைப்பாற வேண்டும் என்று நீதிதேவதை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ஒரு நீண்ட சரித் திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது; கமா என்றுதான் நினைக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. கலைத் துறை யில் கடைக்குட்டி நான். அவரை மூத்தவர் என்ற நிலையில்தான் பழகுகிறோம். நாட்டுக்கு ஒரு தலை வரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் குடும்பத்தலைவரை இழந்துள்ளோம். அந்த தமிழை பற்றி மேலே ஏறி வந்தவன் நான். அவரை வணங்க வந்துள்ளேன். என்றும் வணக்கம் தொடரும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் : இந்திய தேச ஒருமைப்பாட்டையும், மாநில உரிமையையும் காக்க வேண்டும் என்று கூறியவர் கலைஞர். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது எல்லா மாநிலங்களும் அமைதியாக இருந்தபோது, எதிர்த்து பேசியவர் கலைஞர். இதனால் அவரது குடும்பத்தினர் பல இன்னல்களை சந்தித்தபோதும் கொஞ்சமும் பின்வாங்காமல் மாநில உரிமைகளை காப்பாற்றினார். கலைஞருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மோடி அரசு முன்வர வேண்டும்.

புதிய தமிழகம் தலைவர் கே.கிருஷ்ணசாமி: சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சொந்த உழைப்பால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் இருந்தவர் கருணாநிதி. அரசிய லுக்கு அப்பாற்பட்டு கருணாநிதி யுடன் ஏறக்குறைய 30 ஆண்டு களுக்கும் மேலாக மிகவும் நெருக்கமாக நான் இருந்தேன். அந்த வகையில் அவருடைய இழப்பு என்பது உண்மையில் பாதிக்கக்கூடிய விஷயம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழர்களுக்காக பல திட்டங்களை தந்து, அவர்கள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்றியவர் கருணாநிதி. தமிழகத்தின் உரிமைகளை வாதாடி போராடி மத்தியில் இருந்து பெற்றுத்தந்தார். கடின உழைப்பாளி, ஓய்வறியா உழைப்புக்கு இன்று இயற்கை ஓய்வு அளித்திருப்பது வேத னையையும் வருத்தத்தையும் தருகிறது.

ஐஜேகே தலைவர் பாரிவேந் தர்: கலைஞர் இல்லாத தமிழ கத்தை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எண்ணற்ற ஏழைகளுக்கு வாழ்வளித்தவர். அவர்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். பன் முகத்தன்மை கொண்டவர். அவர் தடம் பதிக்காத துறையே இல்லை.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன்: கலைஞர் வாழ்வின் முதல் பாகம்தான் முடிந்திருக்கிறது. இரண்டாவது பாகம் இன்று தொடங்கி இருக்கிறது. முதல் பாகத்தில் அவருடைய உடல் வாழ்ந்தது. 2-வது பாகத்தில் அவருடைய புகழ் வாழும். ‘நெஞ்சுக்கு நீதி’ தலைப்பில் 6 பாகங்களில் தன்னுடைய கதையை 4 ஆயிரத்து 171 பக்கங்களில் எழுதியிருக்கிற தலைவர் இவர். ஆனால் அந்த வரலாறுகூட 2003-ம் ஆண்டு வரைதான் எழுதப்பட்டுள்ளது. கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபடியும் எழுதுகிறேன் என்று கூறியவர் இவ்வளவு பெரிய இடைவெளி விடுவார் என்று நாம் நினைக்கவில்லை. அவர் விட்டுச்சென்ற வரலாற்றை இனி காலம் எழுதும்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: கருணாநிதியின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு.

தமிழக அனைத்து விவ சாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்: உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் மறைவு தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். விவசாய சங்கங்களின் போராட்டங்களை ஆதரித்தவர். அவரது மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.

சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தங்களது தந்தை கருணாநிதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கருணாநிதி, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாக சக்தியாக விளங்கியவர். தனது வாழ்க்கையை ஏழைகள் மற்றும்விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். இந்த துயரமான நாளில் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தாருக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்