திருப்போரூர் பேரூராட்சியில் 100% வரி வசூலிப்பு மூலம் ரூ.1.43 கோடி வருவாய்:காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு

By செய்திப்பிரிவு

திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம், சொத்துவரி, தொழில் வரி உட்பட பல்வேறு வரியினங்களை வசூலித்து வருகிறது. இந்நிலையில், 2017-18-ம் ஆண்டுக்கான வரி வசூலிப்பில் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும். இதன்மூலம், சொத்து வரி ரூ.50 லட்சம், தொழில்வரி ரூ.40 லட்சம் மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.50 லட்சம், கட்டிட வாடகை ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.1.43 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூலிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை முறையாக மேற்கொண்டு, குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் காய்கறி தோட்டங்களை ஏற்படுத்தியுள்ள செயல் அலுவலர் மத்தியாஸின் பணிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாராட்டு சான்று வழங்கியுள்ளார்.

இதேபோல், உத்திரமேரூர், இடைக்கழிநாடு பேரூராட்சி களிலும் 100 சதவீதம் வரி வசூலிப்பு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

உலகம்

13 mins ago

ஆன்மிகம்

11 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்