10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தமிழர் விடுதலைப்படை நிர்வாகி கைது 

By செய்திப்பிரிவு

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வடலூரைச் சேர்ந்த தமிழர் விடுதலைப்படை நிர்வாகி நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

வடலூர் கோட்டக்கரையைச் சேர்ந்தவர் கண்ணாடிவேல் என்ற சிங்காரவடிவேல் (43). இவர் தமிழர் விடுதலைப்படை என்ற அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இவர் மீது வடலூர், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், நெய்வேலி தெர்மல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 10-க் கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் சிங்காரவடிவேல் தலைமறைவா னார். இவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரில் சிங்காரவடிவேல் குடியிருந்து வருவதாக கடலூர் மாவட்ட டெல்டா சிறப்புப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கடலூர் எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் டெல்டா பிரிவு போலீஸார் திருநெல்வேலிக்கு சென்றனர்.

அங்கு வேறு பெயரில் வசித்து வந்த சிங்காரவடிவேலை கைது செய்து நேற்று முன்தினம் வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

12 hours ago

மேலும்