இனி வெயிட்டேஜ் முறை இன்றி ஆசிரியர்கள் நியமனம்: செங்கோட்டையன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கான பணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்