மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் சோதனை முயற்சி வெற்றி: திட்டத்துக்கு ரூ.17,000 கோடி செலவாகும்

By செய்திப்பிரிவு

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள் ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ‘பேட் அபார்ட் டெஸ்ட்’ என்ற சோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, 12.6 டன் எடை கொண்ட ஆளில்லா விண்கலமானது நேற்று காலை 7 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர், 2.7 கி.மீ. தொலைவை விண்கலம் அடைந்தவுடன் வங்காள விரிகுடா கடலில் விழும் வகையில் திருப்பிவிடப்பட்டது. அப்போது விண்கலத்தில் விஞ்ஞானிகள், மனிதர்கள் இருக்கும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2.9 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்தது. இந்த சோதனை 259 விநாடிகளில் முடிந்தது.

இதற்கு முன்பாக 2014-ம் ஆண்டு ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் மூலம் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. தற்போது வரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

அந்தவகையில், இந்தியாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பினால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட 4-வது நாடு என்ற பெருமையைப் பெறும். இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.17,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

34 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்