சிசிடிவி கேமரா பொருத்த வலியுறுத்தி போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

வீடு, அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் வீடு, அலுவலகங்களில் அனைவரும் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் இதுகுறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற் றின் இயக்கத்தை ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். முன்னதாக சைதாப்பேட்டையில் சிறார் மன்றத்தையும், நண்பர்கள் குழுவையும் அவர் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்