குழந்தை கடத்தல் கும்பல் என்று வதந்தி; ஒடிசா இளைஞர்கள் 2 பேருக்கு அடி, உதை: அவதூறு பரப்பியவர்களை தேடும் போலீஸார்

By செய்திப்பிரிவு

குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்பட்ட வதந்தியில் ஒடிசா இளைஞர்கள் 2 பேருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்துள்ளது.

தேனாம்பேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் ஈஸ்வரன். இவரது மனைவி வரலட்சுமி. 4 வயது மகன் அவினாஷ். கடந்த 30-ம் தேதி இரவு 9.45 மணிக்கு அதேபகுதி திருவள்ளூர் சாலையில் தாய் வரலட்சுமியுடன் அவினாஷ் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றான். அப்போது, அவனை வழியில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் பார்த்தனர்.

அவினாஷ் கன்னத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சினர். அவர்கள் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை வரலட்சுமி கண்டு கொள்ளவில்லை. இருவரும் நடந்து சென்றனர். இதை அங்கு நின்று கொண்டிருந்த செல்வராஜ், அவரது நண்பர் பாலமுருகன் பார்த்தனர். இருவரும் பைக்கில் சென்று வடமாநில இளைஞர்கள் 3 பேரிடமும் நீங்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்று கூறி தகராறு செய்தனர்.

அந்த வழியாகச் சென்றவர்களும் வடமாநில இளைஞர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்ற சந்தேகத்தில் திரண்டனர். பின்னர், வடமாநில இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்த 2 வடமாநில இளைஞர்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு இளைஞர் தப்பி விட்டார். போலீஸாரின் விசாரணையில் தாக்கப்பட்டது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கோபால்சாகு (25), அவரது நண்பர் வினோத் விகாரி (22) என தெரியவந்தது.

இவர்கள் மெட்ரோ ரயில் நிறுவன தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிறுவன் அவினாஷ் வீட்டருகே வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அதில், அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த சிறுவன் அவினாஷை தற்போது தாக்குதலுக்குள்ளான வடமாநில இளைஞர்கள் கொஞ்சியுள்ளனர் என்று தெரியவந்தது.

இந்நிலையில், வதந்தி பரப் பிய பாலமுருகனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது நண்பர் செல்வராஜை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்