சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்: நகை வியாபாரிகள் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

முறையான ஆவணம் இன்றி ஆமதாபாதில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5.75 கோடி மதிப்பிலான 23 கிலோ எடையுள்ள தங்க நகைகளை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, நகை வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலம் ஆமதா பாதில் இருந்து நவஜீவன் எக்ஸ் பிரஸ் திங்கள்கிழமை மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணி கள் இருவரிடம் ரயில்வே போலீ ஸார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களது உடைமை களையும் சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் 23 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. நகைகளுக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதுகுறித்து, நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆமதாபாதைச் சேர்ந்த நகை வியாபாரிகள் பிரதோஷ் மற்றும் ஜிந்த்ரத் காந்தி என தெரியவந்தது. இவர்கள் சென்னையில் உள்ள நகைக் கடைகளில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று, ஆமதாபாதில் அவற்றை நகைகளாக தயாரித்து மீண்டும் சென்னைக்கு கொண்டு வந்து நகைக் கடைகளில் விநியோகிப்பதாக தெரிவித்தனர்.

ரயில்வே போலீஸார் அந்த நகைகளை பறிமுதல் செய்து சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்