மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது: அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் புகார்

By செய்திப்பிரிவு

மணல் கடத்தல் மற்றும் தடுக்கச் சென்ற அதிகாரிகளைத் தாக்க முயன்ற இருவரை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பாலாற்றில் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த மாசிலாமணி என்பவரை, திருக்கழுக்குன்றம் போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், லாரியில் மணல் கடத்தியபோது, மடக்கிப் பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக போலீ ஸார் புகார் தெரிவித்திருந்தனர்.

இதேபோல், கூவத்தூர் அருகே பாலாற்றில் லாரியில் மணல் கடத்தியதாக தண்டபாணி என்பவரை, வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மணல் லாரியை மடக்கிப் பிடிக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை, இவர் லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாகவும். இதில், அதிகாரியின் இரு சக்கர வாகனம் சேதமடைந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மாவட்ட எஸ்பி.சந்தோஷ் ஹதிமானி பரிந்துரையின்பேரில், மேற்கண்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்