‘யார் நீங்கள்’; ரஜினியிடம் நான் கேட்ட அர்த்தம் என்ன?- மனம் திறந்த மாணவர்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்டதன் மூலம் பிரபலமான இளைஞர் தான், ஏன் ரஜினியை யார் என கேட்டேன் என்பது குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு அனைத்து அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்றார். நடிகனாக என்னை பார்த்து மக்கள் மனமகிழ்வார்கள் என்று ரஜினி பேட்டி அளித்துவிட்டு தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை ரஜினிகாந்த சந்தித்து பழம் பிஸ்கெட், ரூ.10 ஆயிரம் உதவி பணம் அளித்தார். பொதுமக்கள் நீங்கள் தான் அய்யா அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று ரஜினி கையைப்பிடித்துக்கொண்டு கூறினர். மகிழ்ச்சியுடன் வந்த ரஜினிக்கு சந்தோஷ் என்கிற கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி மொத்த நிகழ்ச்சியையும் திருப்பி போட்டது.

அவர் கேட்ட கேள்வி நீங்கள் யார்? நான் ரஜினிகாந்த். அது தெரியுது 100 நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று கேட்டார். ரஜினி சிரித்தபடி சென்றார். இந்த நிகழ்வு ஊடகங்களிலும், மீடியாக்களிலும் பெரிதானது. “#நான்தான்பாரஜினிகாந்த்” என்ற ஹேஷ்டாக் இந்தியா முழுதும் பிரபலமானது. கேள்விகேட்ட இளைஞரை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மீம்ஸ்கள் பறந்தன.

அதே கோபத்தில் வந்த ரஜினி அன்று மாலை பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்டார். இதனால் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்தை கேள்வி கேட்ட இளைஞர் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்று கிளப்பியவர்கள் அவரை தீவிரவாதிகள் அளவுக்கு சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர். தேசியக்கொடியை எரித்த திலீபனுடன் கல்லூரி மாணவர் சந்தோஷ் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டனர்.

ரஜினியை கேள்விகேட்ட ஒரே காரணத்தால் சாதாரண மாணவரான தன்னை சமூக விரோதிகள் அளவுக்கு சமூக வலைதளங்களில் ட்ரால் செய்யப்படுவதை அடுத்து மாணவர் சந்தோஷ் தன்னிலை விளக்கமாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஏன் ரஜினியை கேள்வி கேட்டேன் தனது நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவரது விளக்கம்:

“என்னைப்பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். நான் சொன்ன நோக்கம் வேறு. மீடியாக்காரர்கள், ட்ரோல் செய்பவர்கள் வேறு திசையில் கொண்டுச் செல்கிறார்கள். நான் சொன்னது அந்த நோக்கத்துடன் அல்ல, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் மற்ற அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு, ஆனால் ரஜினிகாந்த் அப்படி அல்ல.

ரஜினி என்று சொன்னாலே அது வேறு. அவருக்கு பதவி எதுவும் தேவையே கிடையாது. ரஜினின்னு சொன்னாலே பெரிய மதிப்புதான். அவர் எங்களுக்கு சப்போர்ட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், 100 நாள் வரவில்லையே, சப்போர்ட் செய்திருந்தால் எங்களுக்கு பெரிய படைபலமா இருந்திருக்குமே என்று கேட்டேன்.

அந்த காரணத்தினால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் மக்களுக்காக பணி செய்ய வரவேண்டும் என்ற எங்களுக்குள்ள உரிமையால் தான் கேட்டேன். ஆனால் அதை ஊடகங்ககளும், ட்ரோல் செய்பவர்களும், அவர்களுடைய நேரபோக்குக்கும், விளம்பரத்துக்கும், அதை வித்தியாசப்படுத்தவதற்காக வேறு மாதிரி கொண்டுச்செல்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது” இவ்வாறு சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வணிகம்

17 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

25 mins ago

ஓடிடி களம்

57 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்