வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி பெண்களை ஏமாற்றிய கும்பல் சிக்கியது

By செய்திப்பிரிவு

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி ரூ. 43 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

குன்றத்தூரைச் சேர்ந்த ரகுராமன், ராஜ்குமார் ஆகியோர் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் எஸ்எஸ்ஆர்ஜி என்ற பெயரில் அரசு மானியத்துடன் வட்டி இல்லாத கடன் பெற்றுத் தருவதாக நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் தான் நடத்தி வரும் அமைப்பின் மூலம் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.

இதை நம்பி மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக சிறிது சிறிதாக ரூ.43 லட்சம் வரை பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட இந்த கும்பல், ஒரு சிலருக்கு மட்டும் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். பலருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனைத் தெரிந்து கொண்ட பெண்கள், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். கடன் பெற்றுத் தருவதாக மீண்டும் ஆசை வார்த்தை கூறி பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், தலைமறைவான ராஜ்குமாரை பம்மல் பகுதியில் பொதுமக்களே நேற்று முன் தினம் மாலையில் பிடித்து சங்கர்நகர் போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, ஏமாந்த பெண்களிடம் புகார்களைப் பெற்று விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறை வான முக்கியக் குற்றவாளி ரகுராமனைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்