இன்று கருணாநிதியின் 95-வது பிறந்த நாள்: அறிவாலயம், கோபாலபுரத்தில் விழாக்கோலம்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கான ஆயத்த பணிகள் பல்வேறு இடங்களில் நேற்றே தொடங்கிவிட்டன. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டின் முன்பும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மலர்களாலும், கட்சிக் கொடிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் திமுகவின் மாவட்ட அலுவலகங்களிலும், கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் அன்னதானம், ரத்ததானம், நலத்திட்டங்கள் வழங்குதல், கவியரங்கு, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பார்க்கவும், பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கவும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரரா ஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்லாண்டு உடல் நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பாஜக சார்பில் எங்களது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி ஜூன் 95-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இந்த இனிய நாளில் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்