தடையை மீறி பஸ் தினம் கொண்டாடியதாக கல்லூரி மாணவர்கள் மேலும் 10 பேர் கைது: பயணிகளுக்கு துன்பம் அளித்தால் தண்டனை

By செய்திப்பிரிவு

தடையை மீறி பஸ்தினம் கொண்டாடியதாக 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் 2 பேர் உட்பட மேலும் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விவேகானந்தர் இல்லத்திலிருந்து ஆவடி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை, கல்லூரி மாணவர்கள் சிலர் கடந்த 22-ம் தேதி மாலை 3.30 மணிக்கு குழுவாகச் சென்று மடக்கி, அதன் மீது ஏறி ஆட்டம் போட்டனர். அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

போலீஸார் வழக்கு

இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து கல்லூரி மாணவர்கள் 3 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் மாணவர்கள் 2 பேர் உட்பட மேலும் 10 மாணவர்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

பேருந்துக்கு முன்னால் சில மாணவர்கள் அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சென்றனர். அவர்களிடமிருந்து 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடும் எச்சரிக்கை

தடையை மீறி பஸ் தினம் கொண்டாடினாலோ அல்லது பேருந்தை அபகரித்து பயணிகளுக்கு இடையூறு செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்