ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குநர் கவுதமன் கைது

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர் பாக 2 மாதத்துக்கு பின் இயக்குநர் கவுதமனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக ஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான், கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். அவர்கள் மீது எதிர் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிந்து 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று மதியம் திரைப்பட இயக்குநர் கவுதமனை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கவுதமன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் கூறும்போது, “என்னை ஐபிஎல்-க்கு எதிராக போராடியதற்காக கைது செய்ததாக கருதவில்லை. பசுமைவழிச் சாலை திட்டத்தை எதிர்ப்பதற்காகவே கைது செய்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்