மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை: உடனடியாக சரிசெய்ய பயணிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை யில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்தில் தற்போது 35 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கிய 5 நாட்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயிலில் இலவச மாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது ஏராளமானவர்கள் பயணம் செய்த நிலையில், கட்டண முறை அமலான பிறகு கூட்டம் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் செல்போன் சிக்னல் சரியாகக் கிடைப் பதில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் செல் போன் சேவையில் ஏற்படும் சிக்னல் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே அடுத்த 2 மாதங்களிலும், சென்ட்ரல் – நேரு பூங்கா, சைதாப்பேட்டை – டிஎம்எஸ் வழித்தடத்தில் அடுத்த 6 மாதங்களிலும் இப்பிரச்சினை தீர்க்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்