இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்

By செய்திப்பிரிவு

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் (88). தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர் உதவி இயக்குநராக சினிமா உலகில் அறிமுகமானார். கே.ராம்நாத், ‘வீணை’ எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், கடின உழைப்பின் மூலம் இயக்குநரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’, சிவாஜி கணேசன் நடித்த ‘இமயம்’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’, கமல்ஹாசன் நடித்த ‘சிம்லா ஸ்பெஷல்’ உட்பட ஏராளமான வெற்றிப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியதுடன் ‘நாயகன்’, ‘எதிர்காற்று’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் உள்ளார். கதை, வசனம் எழுதுவதிலும் முத்திரை பதித்துள்ளார். 350-க் கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முக்தா சீனிவாசன், நேற்று இரவு காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

சினிமா

14 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

18 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

48 mins ago

கல்வி

43 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

58 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்