நிர்மலாதேவி விவகாரம்: விசாரணை நிறைவு; ஆளுநரிடம் விரைவில் அறிக்கை அளிப்பேன்- அதிகாரி சந்தானம் தகவல்

By செய்திப்பிரிவு

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை முடிவடைந்தது. விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்ட முயன்றதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது: நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை, மதுரையில் விசாரணை முடிவடைந்தது. சென்னைக்கு சென்று விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளேன். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பேன். அவர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை தரப்படலாம். எனது விசாரணை அறிக்கை சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது. அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

11 mins ago

உலகம்

20 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

55 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்