மார்க்கண்டேய கட்ஜு மீது சட்டரீதியான நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி குறித்து தொடர்ந்து குற்றச் சாட்டுகளை தெரிவித்தால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதி பற்றி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனிநபர் விமர்சனமாக சில கேள்வி களை எழுப்பியுள்ளார். தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவும் அதன் தலைமையும் தெளிவாக பதில் அளித்த பிறகும் திரும்பத் திரும்ப தனிமனித தாக்குதலை தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோபால புரம் இல்லத்தைத் தவிர தனக்கு வேறு சொத்துகள் இல்லை என்றும் தன் காலத்துக்குப் பிறகு குடும்பத்தாரின் ஒப்புதலோடு அதை பொது மருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்து, மக்களுக்கு எழுதி வைத்துவிட்டேன் என்றும் பதில் கூறிய பிறகும் திமுக தலைவர் பற்றி இப்படி தனிநபர் தாக்குதலை தொடுப்பது தரமற்ற, உள்நோக்கம் கொண்ட செயல்.

பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் மீது இப்படி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? உங்களை தூண்டிய சக்தி எது? அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை என்ன? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது உங்கள் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு இன்ன மும் பதில் கூறவில்லை.

நீதிபதியாக இருந்தபோது உங்கள் சொத்துக்கணக்கு என்ன? தற்போது வகித்துவரும் பிரஸ் கவுன்சில் சேர்மன் பொறுப்பில் இருக்கும் தங்களின் சொத்து மதிப்பு என்ன? நீங்கள் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும் கிழக்கு கடற்கரைச் சாலை பண்ணை இல்லத்தின் சொத்து மதிப்பு என்ன? பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணை இல்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறதே, அந்த சொத்தின் மதிப்பு என்ன? தங்களின் அறிக்கைகளின் பின்னணி அந்தப் பெண்தான் என்பது உண்மையா?

திமுக தலைவர் கருணாநிதி பற்றிய தங்கள் விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது கூறிய அவதூறுகளுக்கு தாங்கள் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும்.

இனியும் அதுபோன்ற தனிநபர் தாக்குதலைத் தொடர்ந்தால் உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். இவ்வாறு அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

54 mins ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்