பல்கலையுடன் நிர்மலாதேவி தொடர்புக்கான காரணம் என்ன?- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

By என்.சன்னாசி

பேராசிரியை நிர்மலாதேவி, உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறவே மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி சிபிசிஐடி போலீஸார் கூறியது: நிர்மலாதேவிக்கு அவர் பணியாற்றிய கல்லூரியில் சில ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் நிர்மலாதேவி உயர்கல்வித் துறை, பல்கலைக்கழக அளவில் உயர் அதிகாரிகள் செல்வாக்கை பெற திட்டமிட்டுள்ளார். தனக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பது தெரிந்தால் கல்லூரி நிர்வாகம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என நினைத்தார்.

இதுபற்றி தனக்கு பழக்கமான கருப்பசாமியிடம் சொல்லி இருக்கிறார். கருப்பசாமி நிர்மலாதேவியை பேராசிரியர் முருகனிடம் அறிமுகப்படுத்தி உள்ளார். கருப்பசாமியும், முருகனும் மாணவிகளை ஏற்பாடு செய்வது பற்றி நிர்மலாதேவியிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மாணவிகளை முதலில் தயார்படுத்திவிட்டு, அதன்பிறகு சம்பந்தப்பட்ட சபல புத்தியுள்ள உயர் அதிகாரிகளிடம் பேசலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் மொபைலில் பேசிய ஆடியோ வெளியானதால் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உறுதியான ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்