“எதை எதிர்பார்த்து தமிழக மக்களைச் சீண்டுகிறார்கள்?” - கமல்ஹாசன் கேள்வி

By செய்திப்பிரிவு

‘எதை எதிர்பார்த்து தமிழக மக்களைச் சீண்டுகிறார்கள்?’ என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், துணைவேந்தர் நியமனம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் இதை விமர்சனம் செய்துள்ளார். “கர்நாடகத்தில் இருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்து செய்யப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

வணிகம்

30 mins ago

இந்தியா

32 mins ago

சினிமா

38 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்