புதுச்சேரி அரசு கொறடா சார்பில்மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தன்னிச்சையாக தொடர்ந்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

புதுச்சேரி அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்தது. ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதற்கு அனுமதி தரவில்லை. மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம், மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர இயலாது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே புதுச்சேரி அரசு கொறடா சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த மனு ஏற்கப்பட்டுள்ளதாகவும், அரசு கொறடா அனந்தராமன் கூறினார். புதுச்சேரி அரசு மூலம் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தன்னிச்சையாக அரசு கொறடா மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

18 mins ago

வாழ்வியல்

9 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்