‘‘திறமை அடிப்படையிலேயே அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்’’ - தமிழிசை விளக்கம்

By செய்திப்பிரிவு

திறமையின் அடிப்படையிலேயே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் , தமிழக பல்கலைக்கழகங்கள் காவிமயமாக்கப்படவில்லை எனவும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று (வெல்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய தமிழிசை,

“தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும். ஆனால், தமிழகத்தை கிளர்ச்சிக் களமாகவும், போராட்டக் களமாகவுமே வைத்திருக்க சிலர் நினைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெற வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிச்சயமாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை. திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளால் மறுக்கப்பட்ட காவிரி, பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பாய்ந்தோட போகிறது. ஆனால், அதற்கு சில வாரங்கள் அவகாசம் கேட்டிருக்கிறோம். காவிரி தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை மனு மீதான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதில், தமிழக உரிமை மீட்டெடுக்கப்படும்.

தமிழக உரிமைகளை தொலைத்த திமுக, மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்குகிறது. மக்கள் உணர்வுகளோடு பாஜக நிற்கிறது. அதனை திசை திருப்புவதை பாஜக ஒப்புக்கொள்ளாது.

தமிழக பல்கலைக்கழகங்களை காவியமயமாக்கவில்லை. கல்வியமயமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். ஊழல் மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை கல்வி மயமாக்குகிறோம். தமிழர்கள் பலர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தூனைவேந்தர் பதவி வகிக்கின்றனர். இஸ்ரோவின் தலைவராக தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், முறையாக மூன்று பேரை நேர்காணல் நடத்தியே கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. திறமைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் ஊழல் இல்லை. சமூக நீதிக்குக் கேடும் இல்லை. பல்கலைக்கழகங்களுக்குள் அரசியலை புகுத்த வேண்டாம். துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருக்கு உரிமை உள்ளது”

என தமிழிசை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

2 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்