முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு நவீன முறையில் அறுவை சிகிச்சை: உலகில் முதல்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை

By செய்திப்பிரிவு

உலகில் முதல்முறையாக முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட 10 பேருக்கு அவர்களின் கால் எலும்பைக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் வி.சிங்கார வடிவேலு நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

முழங்கால் மூட்டு எலும்பைச் சேதப்படுத்தும் நோய் (Giant Cell Tumour), புற்றுநோய்க்கு சமமானது. மூட்டு எலும்பின் உள்ளே உருவாகும் கட்டி வேகமாக வளர்வதால், எலும்பு வீக்கம் அடையத் தொடங்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பை அரித்து, சேதப்படுத்தி, உறுதித்தன்மையை இழக்கச் செய்யும். நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக மாற்றும் இந்நோய், எளிதாக எலும்பு முறிவையும் ஏற்படுத்தும். ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் இந்நோய், பெரும்பாலும் 20 - 40 வயதுடையவரை தாக்குகிறது.

இந்த நோய்க்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், எதுவும் முழுமையான பலனைத் தரவில்லை. பாதிக்கப்பட்ட மூட்டை அகற்றிவிட்டு, செயற்கை மூட்டு வைத்தாலும் சில ஆண்டு கள் மட்டுமே பயன்படும். பின்னர் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து செயற்கை மூட்டு வைக்க வேண்டிய நிலை உள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து கட்டியை முழுமையாக அகற்றினாலும், மீண்டும் இந்நோய் வருவதற்கு 10 முதல் 35 சதவீத வாய்ப்பு கள் உள்ளன.

சென்னை அரசு மருத்துவ மனையில் என்னுடைய தலைமை யில் டாக்டர்கள் காளிராஜ், சுரேஷ் ஆனந்த், ஹேமந்த்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட 5 ஆண்கள், 5 பெண்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளித்துள்ளோம். முதலில் எலும்பின் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த ஒரு ஊசி (Zoledronic Acid) போடப்பட்டது. இந்த ஊசி போட்ட 3 வாரத்துக்கு பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து, எலும்பின் உள்ளே இருக்கும் கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது.

தேவையான மருந்தை செலுத்திய பிறகு, அவர்களின் காலில் உள்ள சிறிய அளவிலான எலும்பை (Fibula) எடுத்து, கட்டி அகற்றப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர், 6 வாரத்துக்குள் எலும்பின் உறுதித்தன்மைக்காகவும், நோய் மீண்டும் வராமல் தடுக்கவும் முதலில் போட்ட ஊசி இரண்டு முறை போடப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்து ஓர் ஆண்டு கடந்தும் இவர்களுக்கு இந்த நோய் மீண்டும் வரவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்த ில் உலகில் முதல் முறையாக இதுபோன்ற நவீன சிகிச்சை இந்த மருத்துவம னையில் செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு டாக்டர் வி.சிங்கார வடிவேலு தெரிவித்தார்.

பேட்டியின்போது மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, ஆர்எம்ஓ இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

இணைப்பிதழ்கள்

44 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்