ஆளுநருடன் தமிழிசை சந்திப்பு

By செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்துப் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆதரவுக் கட்சிகளின் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை 10.45 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார்.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ‘‘காவிரி பிரச்சினையை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்ட முயற்சித்து வருகின்றன. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தேன். கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்தேன்.

அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் என்னிடம் மனு அளித்தனர். அது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தேன். தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் பேசியது மன நிறைவைத் தந்தது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

29 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

41 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

வலைஞர் பக்கம்

59 mins ago

மேலும்